#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
விழுப்புரம்: சிறுவர்களின் விளையாட்டுத்தனம்.. தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து.. செத்த பாம்பால் வந்த வினை.!!
செத்த பாம்பை சிறுவர்கள் திடீரென சாலையில் வீச, அவ்வழியாக வந்த லாரி ஓட்டுநர் பதறிப்போய் சடன் பிரேக் அடித்ததால் அடுத்தடுத்த விபத்து ஏற்பட்டு ஆட்டோ ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னையில் இருந்து கோவையை நோக்கி கனரக லாரி ஒன்று, இராட்சத இரும்பு பொருட்களை ஏற்றிக்கொண்டு பயணம் செய்துகொண்டு இருந்தது. இந்த லாரி நேற்று காலை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பேரங்கியூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பயணித்துக்கொண்டு இருந்தது.
அப்போது, சிறுவர்கள் சிலர் இறந்துபோன பாம்பை தூக்கி தேசிய நெடுஞ்சாலையில் வீசவே, பாம்பு பறந்து வந்து விழுந்துள்ளது என்று பதறிப்போன லாரி ஓட்டுநர், சடன் பிரேக்கை அடித்துள்ளார். இதனால் லாரியில் இருந்த இரும்பு உருளை ஒன்று சாலையில் விழுந்துள்ளது.
லாரிக்கு பின்னால் வந்த அரசு பேருந்தின் சக்கரம் உருளையின் மீது ஏறிய நிலையில், எதிர்திசை சாலைக்குள் புகுந்த அரசு பேருந்து அவ்வழியாக வந்த லாரியின் மீது மோதி, சளைத்தடுப்பில் புகுந்து சூரிய மின்வெப்ப சாதனத்தின் மீது மோதி நின்றது.
இந்த விபத்து சம்பவத்தில் ஆட்டோ ஓட்டுநர் மற்றும் பேருந்து பயணிகள் 30 க்கும் மேற்பட்டோர் லேசான காயத்துடன் அதிஷ்டவசமாக உயிர்தப்பினர். விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.