#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கண்மாய் சக்தியில் சிக்கி 9 வயது சிறுவன் பரிதாப பலி; பெற்றோர்களே மழை நேரத்தில் கவனம்.!
மழைக்காலங்களில் சிறுவர்களை நீர் நிலைக்கு அலட்சியமாக அனுப்பி வைப்பது, அவர்களின் செயல்பாடுகளை கண்காணிக்காமல் இருப்பது மரணத்திற்கும் வழிவகை செய்யும்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி, சாட்சியாபுரம் பகுதியில் வசித்து வருபவர் தண்டபாணி. இவருக்கு 9 வயதுடைய வைர காளீஸ் என்ற மகன் இருக்கிறார்.
சிறுவன் அங்குள்ள தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இந்நிலையில், நேற்று மாலை அங்குள்ள செங்குளம் பகுதியில் இருக்கும் கண்மாய்க்கு மீன்பிடிக்க சென்றுள்ளார்.
அப்போது, செருப்பு கண்மாய் சகதியில் சிக்கவே, அதனை எடுக்க முயற்சித்தபோது சிறுவன் நீரில் மூழ்கி மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.