மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வீட்டுச்செலவுக்கு பணம் இல்லை, குடிக்கு இருக்குதா?; தந்தையை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற மகன்.!
விருதுநகர் மாவட்டம் சிவகாசி, வெம்பக்கோட்டை, கோட்டையூர் கிராமத்தை சேர்ந்த முதியவர் கிருஷ்ணசாமி. இவர் மாடுகளை வளர்த்து பால் வியபாரம் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், பால் விற்பனை செய்யும் பணத்தை வீட்டு செலவுகளுக்கு தராமல், எந்நேரமும் போதையிலேயே சுற்றி வருவதிலேயே மும்மரமாக இருந்துள்ளார்.
இதுகுறித்து அவரின் மூத்த மகன் கருப்பசாமி தந்தை கிருஷ்ணசாமியிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது இருவருக்குள்ளும் வாக்குவாதம் நடந்து கைகலப்பு உண்டாகியுள்ளது.
இந்த சம்பவத்தில் உச்சகட்ட ஆத்திரத்திற்கு சென்ற கருப்பசாமி, தந்தையின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தியுள்ளார். தீ காயத்தால் படுகாயமடைந்த கருப்பசாமி, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.