திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சாலையை கடந்த மனநலம் பாதிக்கப்பட்டவர்.. விபத்தை தவிர்க்க எண்ணி பரிதாபமாக பலியான நடத்துனர்.!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் வன்னியம்பட்டி, ஹவுஸிங்போர்டு காலனியில் வசித்து வருபவர் கோவிந்தராஜ் (வயது 46). இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணியாற்றி வருகிறார்.
நேற்று காலையில் கோவிந்தராஜ் வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் வெளியே புறப்பட்டு சென்ற நிலையில், மதுரை - செங்கோட்டை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டவர் திடீரென சாலையை கடக்க முயற்சித்துள்ளார்.
சாலையில் சென்று கொண்டு இருந்த கோவிந்தராஜ், மனநலம் பாதிக்கப்பட்டவரின் மீது மோதல் இருக்க வாகனத்தை திருப்பியுள்ளார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் விபத்திற்குள்ளாகியுள்ளது.
வாகனத்தில் இருந்து கீழே விழுந்த கோவிந்தராஜின் மார்பு பகுதியில் பலத்த காயம் ஏற்படவே, சுதாரித்த கோவிந்தராஜ் தனது சகோதரர் பழனிசாமிக்கு தகவல் தெரிவித்துள்ளார். நிகழ்விடத்திற்கு விரைந்த பழனிச்சாமி, சகோதரரை சிகிச்சைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதி செய்தார்.
பார்ப்பதற்கு இயல்பான நிலையில் இருந்த கோவிந்தராஜ், திடீரென மருத்துவமனையிலேயே மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் குடும்பத்தினர் கோவிந்தராஜின் உடலை பார்த்து கதறியழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த விஷயம் தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.