மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்ன கொடுமை இது! கல்லைக் கட்டி கிணற்றில் வீசி கொலை.. சக நண்பர்களால் நேர்ந்த விபரீதம்... போலீசார் விசாரணை..!
தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஆர்.சி ரோமன் கோவில் தெருவில் வசித்து வருபவர் செல்வம் மற்றும் அவரது மகன் கீர்த்தி. கீர்த்தியை கடந்த சில நாட்களாக காணவில்லை என்று செல்வம் உத்தமபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கீர்த்தியின் நண்பர்களான 4 பேரை அழைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது விசாரணையில் நண்பர்களுடன் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் கீர்த்தியை சகநண்பர்கள் கொலை செய்துள்ளனர். மேலும் சடலத்தை மறைப்பதற்காக அங்குள்ள கிணற்றில் கல்லை கட்டி வீசியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து கீர்த்தி கொலை செய்து வீசப்பட்ட கிணற்று பகுதிக்கு சென்ற போலீசார் தீயணைப்பு துறையினரின் உதவியோடு அழுகிய நிலையில் உள்ள கீர்த்தியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் கீர்த்தியின் நண்பர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.