மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஒரே மரத்தில் தூக்கில் தொங்கிய இளம் காதல் ஜோடி காரணம் என்ன.? காவல்துறையினர் தீவிர விசாரணை.!
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தொழில்நுட்ப பூங்கா பகுதியில் வடமாநிலத்தைச் சேர்ந்த 15 குடும்பத்தை சேர்ந்த நபர்கள் தங்கியிருந்து பணியாற்றி வந்தனர்.
இந்த நிலையில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கோமால் குமாரி, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த திம்பு மாஜி உள்ளிட்ட இருவரும் காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த சூழ்நிலையில் தான் நேற்று முன்தினம் அதிகாலை இவர்கள் இருவரும் திடீரென்று காணாமல் போயினர்.
இதனால் அதிர்ச்சியடைந்த வட மாநில தொழிலாளர்கள் அவர்கள் பணியாற்றி வந்த நிறுவனத்தின் மேலாளர் விஜயநாதனிடம் விவரத்தை கூறி அனுமதி பெற்றுக்கொண்டு, காணாமல் போன இருவரையும் தேடத் தொடங்கினர். பல்வேறு பகுதிகளில் அவர்கள் இருவரையும் தேடிப் பார்த்தும் அவர்கள் எங்கும் கிடைக்கவில்லை. இந்நிலையில் தான் நேற்று அவர்கள் பணியாற்றி வந்த நிறுவனத்திற்கு அருகேயிருந்த ஒரு வேப்ப மரத்தில் ஒரே துப்பட்டாவில் இருவருமே தூக்கிட்டு தொங்கிய நிலையில், பிணமாக மீட்கப்பட்டனர்.
இந்த விவகாரம் குறித்து, காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உயிரிழந்த இருவரின் உடலையும் மீட்டு குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததுடன், இந்த விவகாரம் குறித்து வழக்குப்பதிவு செய்து காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.