மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நீ எல்லாம் என்ன மனுஷன்யா..? போதை ஆசாமியின் வெறிச்செயல்.. கர்ப்பிணி மனைவியை அடித்துக் கொன்ற கொடூர சம்பவம்..!
திருப்பூருக்கு அருகே உள்ள திருமுருகன்பூண்டி நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளர்களாக பணியாற்றி வருபவர்கள் அணில்பாவர் - ரேகா தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் ரேகா 5 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். மேலும் இவர்கள் மகாராஷ்டிராவில் இருந்து புலம்பெயர்ந்து வந்த தொழிலாளர்கள் ஆவர்.
இந்நிலையில் அணில்பாவர் குடிக்கு அடிமையாகி தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபடுவதையே வழக்கமாக வைத்துள்ளார். சம்பவத்தன்று குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த அணில்பாவர் மனைவி ரேகாவுடன் மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதனையடுத்து ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த அணில்பாவர் மனைவி ரேகாவை கர்ப்பிணி என்றும் பாராமல் பூரிக்கட்டையால் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே ரேகா பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் தனது இரண்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு அணில்பாவர் தப்பிக்க முயற்சி செய்தபோது போலீசார் அவரை வலைத்து பிடித்து கைது செய்தனர். மது போதையில் கர்ப்பிணி என்றும் பாராமல் மனைவியை அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.