திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சமாதானம் பேச வந்த கணவரை கிரிக்கெட் மட்டையால் ஓங்கி அடித்த மனைவி, மாமியார்... பின்னர் நிகழ்ந்த சோகம்!!
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள பலம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விமல்குமார் - பூர்ணிமா தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் விமல் மற்றும் பூர்ணிமாவுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. ஒரு கட்டத்தில் பூர்ணிமா கோபித்துக் கொண்டு தனது பிள்ளைகளை அழைத்து கொண்டு கொடமாண்டப்பட்டியில் உள்ள தனது தாயாரான அம்சவேணி வீட்டுக்கு சென்றுள்ளார்.
அங்கு தாயின் வீட்டிற்கு அருகில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தனது மனைவியை சமாதானம் செய்ய தனது தாயை அழைத்து கொண்டு விமல் குமார் மனைவி ஊருக்கு சென்றுள்ளார். அங்கு தன்னுடன் குடும்ப நடத்த வருமாறு மனைவியை அழைத்துள்ளார் விமல். பூர்ணிமா வர மறுக்கவே இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றி பூர்ணிமா மற்றும் அவரது தாய் அம்சவேணி கிரிக்கெட் மட்டையால் விமல் குமாரை விடாது தாக்கியுள்ளனர். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் சண்டையை தடுத்து நிறுத்தி விமல் குமாரையும் அவரது தாயாரையும் ஊருக்கு அனுப்பி வைத்தனர். இருவரும் பேருந்தில் ஊர் திரும்பிய போது திடீரென விமல் குமார் மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து விமல் குமாரின் தாய் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். போலீசார் இறந்த விமல்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையை வைத்து பூர்ணிமா மற்றும் அவரது தாயார் அம்சவேணியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.