மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விடுமுறையில் வீட்டுக்கு வந்த பெண்: மீண்டும் வேலைக்கு கிளம்பிய போது நடந்த விபரீதம்..!
கடலூர் மாவட்டம், புவனகிரி அருகேயுள்ள ஆதிவராகநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சாமிநாதன் ( 44). இவர் கொத்தனாராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பிரேமா (40). இந்த தம்பதியினருக்கு 3 மகள்கள் உள்ளனர். அவர்களில் 2 மகள்களுக்கு திருமணமாகிவிட்டது. ஒரு மகளுக்கு திருமணமாகவில்லை. பிரேமா, கடந்த 7 மாதங்களாக திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை ஒட்டி விடுமுறையில் பிரேமா சொந்த ஊருக்கு வந்திருந்தார். தீபாவளி முடிந்ததும் மீண்டும் திருப்பூருக்கு வேலைக்கு செல்ல பிரேமா தயாரானார். இதனை விரும்பாத சாமிநாதன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் தம்பதியினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சாமிநாதன், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து பிரேமாவை சரமாரியாக குத்தினார். இதில் அவரது உடலில் 12 இடங்களில் கத்திக்குத்து விழுந்தது.
இந்த எதிர்பாராத தாக்குதலால் நிலைகுலைந்த பிரேமா, ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதனையடுத்து அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர், சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த புவனகிரி காவல்துறையினர், சாமிநாதனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.