மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதலனை கரம்பிடித்த புதுமணப்பெண் 3 நாட்களில் மர்மச்சாவு.. தூக்கில் சடலமாக மீட்பு.. ஆவடியில் அதிரவைக்கும் சம்பவம்.!
திருமணமாகி மூன்று நாட்களே ஆன நிலையில், புதுமணப்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னை ஆவடியில் உள்ள கோவர்த்தனகிரி, அன்பு நகர், முதல் தெருவில் வசித்து வருபவர் உதயா (வயது 24). எம்.பி.ஏ பட்டதாரியான இவர் பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். தொடர்ந்து பூந்தமல்லியில் குமரன் நகரில் வசித்து வருபவர் அனிதா (வயது 26). பி.ஏ பட்டதாரியான இவர் உதயா வேலை செய்யும் அதே இடத்தில் வேலை செய்து வந்துள்ளார்.
இவர்கள் இருவருக்கும் வேலை செய்யும் இடத்தில் பழக்கம் ஏற்பட்டு சிறிது நாட்களில் அது காதலாக மலர்ந்துள்ளது. இந்த நிலையில், அனிதாவின் பெற்றோர்கள் அவருக்கு திருமணம் செய்வதற்காக மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளனர். இதன் காரணமாக உதயா மற்றும் அனிதா ஆகிய இருவரும் கடந்த 6ஆம் தேதி சென்னை ராயபுரத்தில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் திருமணம் செய்து கொண்டனர்.
இதன்பின் உதயாவின் வீட்டிற்கு சென்று இருவரும் மேல்தளத்தில் தனியாக இருக்கும் குடிசை வீட்டில் குடும்பம் நடத்தி வந்துள்ளனர். தொடர்ந்து அனிதாவின் பெற்றோர் அவரை வீட்டிற்கு வருமாறு வற்புறுத்தியுள்ளனர். ஆனால், இதற்கு உதயாவின் பெற்றோர்கள் மறுப்பு தெரிவித்த நிலையில், அனிதா குடிசை வீட்டுக் கூரையில் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த உதயா வீட்டார், அவரை மீட்டு ஆவடியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இருப்பினும், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் முன்பே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனைக்கு வந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து ஆவடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்த நிலையில், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் திருமணமாகி மூன்று நாட்களே ஆன நிலையில புதுமணப்பெண் இறந்துள்ளதால் திருவள்ளூர் ஆர்.டி.ஓ விசாரணை நடத்தி வருகிறது.