மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தோட்டத்தில் தொழிளாலர்களுக்குள் தகராறு... அரங்கேறிய பரபரப்பு கொலை சம்பவம்..!
தன்னுடன் வேலைசெய்யும் தொழிலாளியை கொலை செய்தவிட்டு காணவில்லை என நாடகமாடிய சக தொழிலாளியை போலீசார் சிசிடிவி காட்சிகளின் மூலமாக கைது செய்துள்ளது அப்பதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டத்தில் உள்ள போடி தாலுகாவிற்குட்பட்ட குரங்கணி அருகாமையில் உள்ள ஊத்தம்பாறைப் பகுதியில் தனியாருக்கு உரிமையான தோட்டம் ஒன்று உள்ளது. அங்குள்ள போ.அம்மாபட்டி கிராமத்தில் வசித்து வருபவர் முருகன் (வயது 48). ஜெகதீஸ்வரன் (வயது 35). அங்கே இவர்கள் இருவரும் தோட்டப் பராமரிப்பு பணி மற்றும் காவல் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்த நிலையில், தோட்டத்தில் உள்ள தொழிலாளி முருகனுக்கு, உரிமையாளர் செல்போனில் தொடர்புகொண்ட போது, முருகன் செல்போனை எடுத்து ஜெகதீஸ்வரன் அவரை காணவில்லை என தெரிவித்ததது உரிமையாளருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. எனவே, தனது தோட்டத்திற்கு சென்று, ஜெகதீஸ்வரனிடம் முருகன் எங்கே? அவருக்கு என்ன ஆயிற்று? என பல கேள்விகளை கேட்டுள்ளார். அப்போது அதற்கு பதில் கூற இயலாமல், ஜெகதீஸ்வரன் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியுள்ளார்.
இதனால் மிகவும் சந்தேகமடைந்து தனது தோட்டத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் உள்ள காட்சிகளை உரிமையாளர் ஆய்வு செய்துள்ளார். சிசிடிவி கேமராவில் காணாமல் போனதாக சொல்லப்பட்ட முருகனும், ஜெகதீஸ்வரனும் சில மணி நேரங்களுக்கு முன்பே, ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். மேலும், அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறினால், இருவரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
அத்துடன் ஜெகதீஸ்வரன், முருகனை அருகிலிருந்த அரிவாளால் வெட்டியுள்ளார். பின் அவரது உடலை ஓடையில் மறைப்பதற்காக தோட்டத்திற்கு இழுத்துச்சென்றது தெரியவந்தது. இதனை கண்டு அதிர்ந்த உரிமையாளர், இந்த விஷயம் தொடர்பாக உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஓடையில் சடலமாக இருந்த முருகனை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், ஜெகதீஸ்வரனிடம் விசாரணை நடத்திய நிலையில், பல மாதங்களாக தோட்டத்தில் வேலை செய்து வந்த முருகன், தனது உறவினரான ஜெகதீஸ்வரனை சில மாதங்களுக்கு முன் வேலைக்கு சேர்த்துள்ளார். இருவரும் ஒருவருக்கொருவர் தங்களுக்கு உண்டான வேலையை பிரித்து செய்துவந்த நிலையில், தான் சரிவர வேலை செய்யவில்லை என முதலாளியிடம் தன்னைப்பற்றி முருகன் புகார் தெரிவித்ததாகவும், இதனால் ஏற்பட்ட கோபத்தால் ஒன்றாக மது அருந்தும்போது தன்னைப்பற்றி எதற்காக முதலாளியிடம் தெரிவித்தாய்? என கேட்டபோது, அதற்கு முருகன் "நான் அப்படி தான் கூறுவேன். இப்போது என்ன?" என கூறியுள்ளார்.
இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியது. ஒரு கட்டத்தில் ஆவேசமடைந்த ஜெகதீஸ்வரன் தோட்டத்திலுள்ள அரிவாளை எடுத்து முருகனை வெட்டியுள்ளார். இதனால் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்த முருகனை மறைப்பதற்கு அருகிலிருந்த ஓடைக்கு இழுத்துச் சென்றுள்ளார்.
இதுகுறித்து இறந்தவரின் மனைவி மாரியம்மாள் புகார் அளித்த நிலையில், வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஜெகதீஸ்வரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். அத்துடன் மது போதையில் மயங்கி, தன்னை வேலைக்கு சேர்த்த சக தொழிலாளியை வெட்டி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.