மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்னைய ஒழுங்கா வேலைக்கு சேர்த்துக்கோ இல்லன்னா அவ்வளவுதான்... முதலாளியால் தொழிலாளிக்கு நிகழ்ந்த சோகம்!!
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள மேல திருப்பாலக்குடி கிராமத்தை சேர்ந்தவர் சுவேந்திரன். இவர் அதே பகுதியை சேர்ந்த சக்கரவர்த்தி என்பவரது தோட்டத்தில் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென சுவேந்திரனின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சக்கரவர்த்தி அவரை வேலையிலிருந்து நிறுத்தி உள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது பகையாக மாறியுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சக்கரவர்த்தி வீட்டில் இருந்த போது மதுபோதையில் வந்த சுவேந்திரன் தன்னை மீண்டும் வேலைக்கு சேர்த்து கொள்ள கூறி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். உடனே அங்கிருந்தவர்கள் சுவேந்திரனை சமாதானம் செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ஆனால் சுவேந்திரன் வீட்டிற்கு சென்ற பிறகு சக்கரவர்த்திக்கு போன் செய்து அவதூறாக பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சக்கரவர்த்தி நேராக சுவேந்திரன் வீட்டிற்கு சென்று அவரை அரிவாளால் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் சுவேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சக்கரவர்த்தி கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.