பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
உலகக்கோப்பை தோல்வி எதிரொலி.. மாரடைப்பால் பொறியாளர் பலி.. அதிர்ச்சியில் குடும்பத்தினர்..!
திருப்பதி அடுத்த துர்கசமுத்திரம் பகுதியில் வசித்து வருபவர் ஜோதி குமார். இவர் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கிரிக்கெட் போட்டியின் தீவிர ரசிகரான ஜோதி குமார் நேற்று நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியினை தனது வீட்டில் அமர்ந்து தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது கிரிக்கெட் விளையாட்டில் இந்தியா தோல்வியை நோக்கி மெல்ல மெல்ல சரிய தொடங்கியது. இதனால் வேதனை அடைந்த ஜோதி குமாருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவரது குடும்பத்தினர் உடனடியாக ஜோதி குமாரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
ஆனால் அங்கு ஜோதிகுமாரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பு ஏற்பட்ட இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதனைக் கேட்ட ஜோதிக்குமாரின் குடும்பத்தினர் கதறி துடித்துள்ளனர். மேலும் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாமல் இளைஞர் ஒருவர் மாரடைப்பால் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.