#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
திருமணம் ஆன நபருடன் நெருங்கி பழகிய இளம் பெண்.! கர்ப்பமாக வந்து நிற்கும் பரிதாபம்.!
மயிலாடுதுறை நல்லத்துக்குடி பாரதிதாசன் தெருவைச் சேர்ந்தவர் விக்னேஷ்(26). இவருக்கு திருமணமாகி மனைவி, குழந்தை உள்ளனர். இந்நிலையில், விக்னேஷ் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றியபோது, அங்கு, உடன் பணியாற்றிய திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியை சேர்ந்த சபீனா(23) என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது.
இவர்களின் நட்பு நாளைடைவில் காதலாக மாறியது. இந்தநிலையில் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசியுள்ளனர். பின்னர் கொரோனா பரவல் காரணமாக இருவரும் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். தற்போது சபீனா ஐந்து மாத கர்ப்பிணியாக உள்ளார். இதனால் விக்னேஷை சந்தித்த சபீனா, தான் கர்ப்பமாக இருப்பதால், தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி வற்புறுத்தியுள்ளார்.
ஆனால், விக்னேஷ் திருமணம் செய்ய மறுத்ததோடு, கருவைக் கலைக்க சொல்லி சபீனாவை வற்புறுத்தியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சபீனா மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். சபீனா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விக்னேஷை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.