மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கட்டையால் அடித்து இளைஞர் கொலை... கைது செய்யப்பட்ட நண்பரிடம் காவல்துறை விசாரணை.!
கொடைக்கானலில், புதுக்கோட்டையைச் சேர்ந்த இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தனியார் தங்கும் விடுதி ஊழியர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் மாப்பிள்ளையார் குளம் பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவரது மகன் கலியமூர்த்தி(21). அதே ஊரைச் சேர்ந்த சுகுமாரன் என்பவரது மகன் குமரன் வயது 27. இவர்கள் இருவரும் கொடைக்கானலில் உள்ள தங்கும் விடுதியில் பணியாற்றி வந்தனர். நண்பர்களான இருவரும் அடிக்கடி ஒன்றாக சேர்ந்து மது குடித்து வந்துள்ளனர்.
அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டபோது ஆத்திரமடைந்த குமரன் மரக்கட்டையை எடுத்து அடித்ததில் சம்பவ இடத்திலேயே கலியமூர்த்தி பலியானார்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து கொலையாளி குமரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.