ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
நாமக்கல்லில் பரபரப்பு... சக தொழிலாளியை போட்டு தள்ளிய இளைஞர்.!! கொலையில் முடிந்த முன் விரோதம்.!!
நாமக்கல் மாவட்டத்தில் முன்விரோதம் காரணமாக இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.
கூலிங் டைல்ஸ் அமைக்க வர வைக்கப்பட்ட தொழிலாளிகள்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த புருஷோத்தமன் என்பவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். இந்நிலையில் அவர் தனது புதிய வீட்டின் மேற்கூறையில் கூலிங் டைல்ஸ் அமைப்பதற்காக திண்டுக்கல்லைச் சேர்ந்த மோகன்ராஜ் மற்றும் விஜய் ஆகியோரை அழைத்து வந்திருக்கிறார். இவர்கள் இருவரும் கூலிங் டைல்ஸ் அமைக்கும் பணியை செய்து வந்துள்ளனர்.
மோகன்ராஜ் அடித்து கொலை
இந்நிலையில் நேற்று காலை மோகன்ராஜ் இரும்பு ராடால் அடித்து கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த புருஷோத்தமன் காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இறந்த மோகன்ராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
இதையும் படிங்க: "கல்யாணம் பண்ண சொன்னா வீடு புகுந்து.." மிரட்டிய இளைஞன்.! தட்டி தூக்கிய காவல் துறை.!!
சக தொழிலாளி ஒப்புதல் வாக்குமூலம்
காவல்துறை விசாரணையில் மோகன் ராஜ் உடன் பணியாற்றி வந்த சக தொழிலாளியான விஜய் என்பவர் மோகன் ராஜை அடித்து கொலை செய்தது தெரிய வந்திருக்கிறது. மோகன்ராஜ் மற்றும் விஜய் இடையே ஏற்கனவே முன்பகை இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இருவருக்கும் இடையே மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது சக தொழிலாளர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி உறங்க வைத்துள்ளனர். தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென ஆவேசமான விஜய் அங்கிருந்த இரும்பு ராடை எடுத்து மோகன்ராஜ் தலையில் அடித்து கொலை செய்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: விமானப்படை சாகச மரணங்கள்: கும்பகோணத்தை இழுக்கும் ஆர்.எஸ் பாரதி.. எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு சரமாரி விளாசல்.!