96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
இளம் பெண் தீ குளித்து தற்கொலை... கொழுந்தனாரை கைது செய்யக்கோரி உறவினர்கள் போராட்டம்.!
விக்கிரவாண்டி அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அந்தப் பெண்ணின் கொழுந்தனார் கைது செய்யப்பட்டிருக்கும் விவகாரம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
விக்கிரவாண்டியை அடுத்துள்ள நரசிங்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி லட்சுமி. விஜயகுமார் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அவரது மனைவி லட்சுமி கடந்த 3-ம் தேதி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். படுகாயம் அடைந்த அவரை மீட்ட உறவினர்கள் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் கடந்த 5-ம் தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார். இதனைத் தொடர்ந்து லட்சுமியின் தாயார் கௌரி தனது மகளின் சாவிற்கு அவரது கொழுந்தனரான விமல்(24) என்ற இளைஞர் தான் காரணம் என்றும் அவர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததால் தான் தனது மகள் தற்கொலை செய்தார் என்றும் புகார் அளித்தார்.
மேலும் நேற்று முன்தினம் இரவு 8:00 மணியளவில் லட்சுமியின் உறவினர்கள் விமலை கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து எஸ்பி. கவீனா உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் சேகர், விமல் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.