மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"என் சாவுக்கு வராத; நல்லா இரு.." தற்கொலை செய்து கொண்ட காதல் மனைவி.!! கணவன் கைது.!!
சென்னையில் கணவன் சித்திரவதை செய்ததால் காதல் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் கணவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
காதலித்து திருமணம்
கடலூர் மாவட்டம் புவனகிரி என்ற பகுதியைச் சேர்ந்த ஐஸ்வர்யா(28) என்ற பெண்ணும் சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த அரவிந்த் குமார்(28) என்பவரும் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் போது காதலித்தனர். மேலும் இவர்கள் இருவரும் பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர்.
குடும்ப தகராறு
இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக அரவிந்த் குமார் வேலைக்கு செல்லாமல் மது பழக்கத்திற்கு அடிமையாகி வீட்டிலேயே இருந்திருக்கிறார். இதுகுறித்து ஐஸ்வர்யா கேட்டபோது அவருக்கு சோறு போட மாட்டேன் என்று கூறிய அரவிந்த் குமார் அவரை அனாதை என்றும் திட்டியதாக தெரிகிறது. இதனால் ஐஸ்வர்யா கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இதையும் படிங்க: போலி டாக்டரால் பறிபோன உயிர்.!! 22 வயது இளைஞருக்கு நேர்ந்த துயர முடிவு.!!
தற்கொலை
இந்நிலையில் கடந்த 21ஆம் தேதி திருமண வீட்டிற்கு சென்று வந்த ஐஸ்வர்யா தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ஐஸ்வர்யா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்ட பிறகு ஐஸ்வர்யாவின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வந்தனர்.
சிக்கிய வாட்ஸ்அப் வாய்ஸ் நோட்
இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணையில் ஐஸ்வர்யா அவரது கணவருக்கு அனுப்பிய வாய்ஸ் நோட் சிக்கி இருக்கிறது. அதில் "என் சாவுக்கு நீ வராதே. நான் தற்கொலை செய்வதற்கு நீ மட்டும் தான் காரணம். நல்லா இரு" என அனுப்பி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து அவரது கணவர் அரவிந்த் குமாரை கைது செய்துள்ள காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: குமரியில் அதிர்ச்சி... ஆபாச படம் எடுத்து கல்லூரி மாணவிக்கு மிரட்டல்.!! இளைஞர் கைது.!!