மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
16 வயது இன்ஸ்டாகிராம் காதலியை திருமணம் செய்த இளைஞர்... பாய்ந்த போக்சோ சட்டம்.! பகீர் உண்மை.!
சென்னையைச் சேர்ந்த 16 வயது சிறுமி காணாமல் போன சம்பவத்தில் திருவண்ணாமலையைச் சேர்ந்த 19 வயதில் இளைஞர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான காவல்துறையின் விசாரணையில் திடுக்கிடும் உண்மை வெளியாகி அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.
சென்னை திருவொற்றியூரை சேர்ந்த 16 வயது சிறுமியை காணவில்லை என அவரது பெற்றோர் காவல் துறையிடம் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த காவல்துறையினர் சிறுமி திருவண்ணாமலை சேர்ந்த பத்தொன்பது வயதை இளைஞருடன் தங்கியிருப்பதை கண்டுபிடித்தன.
பின்னர் திருவண்ணாமலை சென்று சிறுமியை மீட்ட காவல்துறையினர் 19 வயது இளைஞரை கைது செய்து அவரிடம் நடத்திய விசாரணையில் பல உண்மைச் சம்பவங்கள் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட இளைஞர் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
அந்த வாக்குமூலத்தில் திருவொற்றியூரைச் சேர்ந்த சிறுமியும் இந்த இளைஞரும் இன்ஸ்டாகிராம் மூலமாக பழகி காதலித்து வந்துள்ளனர். இந்த காதலுக்கு அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் சிறுமியை அழைத்துக் கொண்டு திருவண்ணாமலை வந்து அங்குள்ள முருகன் கோவிலில் வைத்து திருமணம் செய்து தன்னுடனேயே தங்க வைத்திருப்பதை ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அந்த இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.