மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆன்லைன் ரம்மியால் மீண்டும் விபரீதம்: இளைஞர் செய்த காரியத்தால் கதறிய பெற்றோர்..!
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகேயுள்ள ஸ்ரீ வைகுண்ட பெருமாள்புரம் பகுதியை சேர்ந்தவர் பூபதி ராஜா (28). இவர் தூத்துக்குடி பகுதியில் இயங்கிவரும் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், பூபதி ராஜா ஆன்லைன் ரம்மி விளையாடி அதிக அளவு பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக அவருக்கு கடனும் ஏற்பட்டதால் மன உளைச்சல் அடைந்துள்ளார். இதனை அறிந்த பூபதிராஜாவின் பெற்றோர், அவரை கண்டித்ததுடன் ஆன்லைன் சூதாட்டங்க்களில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.
இதற்கிடையே பணத்தை கேட்டு பலரும் கொடுத்த நெருக்கடியால் வாழ்க்கையில் விரக்தியடைந்த பூபதி ராஜா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்றிருந்த அவரது பெற்றோர் வீடு திரும்பிய போது, பூபதிராஜா தூக்கில் சடலமாக தொங்கியதை கண்டு கதறி அழுதனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த குளத்தூர் காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு அந்து பூபதிராஜாவின் உடலை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத சோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.