திருட்டு ஆசாமியை கலாய்த்த இளம்பெண்; மோசடி அழைப்பை ஏற்று துணிகர செயல்.! வைரலாகும் கலக்கல் வீடியோ.!



govt-scheme-otp-scam-girl-trolled-live-call

 

தொழில்நுட்ப உலகில் போலியான மோசடி அழைப்புகள் என்பது வெகுவாக அதிகரித்துவிட்டது. அரசின் திட்டத்திற்கு அழைத்துள்ளோம், உங்களின் ஆதார் கார்டு முன்பதிவு செய்ய வேண்டும், ஸ்டேட் பேங்கில் இருந்து பேசுறோம், உங்க ஏடிஎம் கார்டுலே முன்னாடி 12 நம்பர், பின்னாடி 3 நம்பர் இருக்குல்லே அதை சொல்லுங்க என பல விதமான மோசடி செயல்கள் தொடருகின்றன.

பண்டிகை நாட்களில் அதிக மோசடி

குறிப்பாக பண்டிகை நாட்களில் பொருட்களை குறைந்த விலைக்கு விற்பதாகவும் இணையவழியில் மோசடி செயல்கள் நடைபெறுகின்றன. காலத்தின் மாற்றம், மக்களின் விழிப்புணர்வுக்கு ஏற்ப குற்றவாளிகளும் புதுப்புது வழிகளை கண்டறிந்து சைபர் குற்றங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில், அரசின் திட்டம் ஒன்றில் ரூ.10 இலட்சம் வந்துள்ளதாக கூறி, நபர் ஒருவர் பெண்ணிடம் மோசடி செய்ய முயன்றார். 

இதையும் படிங்க: உலகளவில் ஸ்மார்ட்போன் விற்பனை 2% அதிகரிப்பு.. அடித்து தூக்கிய ஐபோன் 16 விற்பனை.! 

இல்லாத திட்டத்தில் ரூ.10 இலட்சம் ஒதுக்கப்பட்டதாக மோசடி

இதனால் அவர் தனது மகளிடம் விபரத்தை தெரிவிக்க, இதனை வீடியோ எடுத்தவாறு ஓடிபி கேட்டு போன் செய்தவரை பெண்மணி கலாய்த்த சம்பவம் நடந்துள்ளது. வடமாநிலத்தில் நடந்ததாக அறியப்படும் சம்பவத்தின் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வரும் நிலையில், அதில் மத்திய அரசின் திட்டம் ஒன்றில் ரூ.10 இலட்சம் பயனருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், அதனை உறுதி செய்ய ஓடிபி-ஐ கூற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மர்ம நபரின் செயலை உணர்ந்த இளம்பெண் அதனை இலாவகமாக கையாண்டு இருக்கிறார். 

இவ்வாறான மோசடி செயல்களில் மக்கள் ஏமாறாமல் இருக்க வேண்டும். ஒருவேளை பணத்தை இழந்தால், 24 மணிநேரத்திற்குள் புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு பணம் மீட்கப்படும்.