ஆத்தாடி.. இந்த இடங்களில் செல்போன் சார்ஜ் போடுறீங்களா?.. உங்க போனில் கண்டிப்பா வைரஸ் இருக்கும்..!
ஸ்மார்ட் போன் இன்றளவில் நமக்கு மிகப்பெரிய உதவி செய்யும் உபகரணங்களில் முக்கியமானதாக இருக்கிறது. எந்த வேலையை எடுத்தாலும் அல்லது யாரோ ஒருவருக்கு பேச வேண்டும் என்றாலும் நமக்கு அது தேவைப்படுகிறது.
நமது பயணங்களின் போது செல்போனில் சார்ஜ் இல்லாமல் இருக்கும் பட்சத்தில் அதனை சார்ஜ் ஏற்றுவதற்கு விமான நிலையம், ஹோட்டல், ஷாப்பிங் மால் போன்றவற்றில் யூஎஸ்பி வசதிகள் உள்ளன.
இந்த நிலையில் யூஎஸ்பி கேபிள்கள் இருக்கும் சார்ஜ் போர்டல் பொதுவெளிகளில் இருந்தால் அதன் மூலமாக சார்ஜ் ஏற்ற வேண்டாம் என்றும், இதன் மூலமாக மால்வேர் அல்லது வைரஸ் போன்றவற்றை நமது செல்போனுக்கு அனுப்பி நம்மை உளவு பார்க்கலாம் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
சார்ஜரை மின்சாரத்தில் பயன்படுத்தும் வசதி இருந்தால் மட்டுமே அதனை பயன்படுத்துங்கள் என்றும் அறிவுறுத்துகின்றனர். எனவே மக்கள் அனைவரும் தாங்கள் பயன்படுத்துவதற்கென தனியே யூஸ்பி வைத்திருத்தல் நல்லது.