#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கொரோனாவால் பாதிக்கப்பட்ட தாத்தா, பாட்டியை கட்டியணைக்க 10 வயது சிறுமி செய்த நெகிழ்ச்சி காரியம்! வைரலாகும் வீடியோ!
கலிபோர்னியாவைச் சேர்ந்தவர் பைஜ் ஓக்ரே. 10 வயது நிறைந்த இந்த சிறுமியின் பாட்டி மற்றும் தாத்தா இருவரும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தனது தாத்தா,பாட்டியை கட்டி அணைக்க முடியாமல் அன்பை பகிர்ந்துகொள்ளாமல் பெரும் வருத்தத்தில் இருந்த அந்த சிறுமி அவர்களை ஆசையுடன் கட்டியணைக்க நினைத்து புதிய வழியை கண்டுபிடித்தார்.
பின்னர் இதுகுறித்து அந்த சிறுமி தனது தாயாரிடம் கூறியுள்ளார். அதனை தொடர்ந்து இருவரும் இணைந்து கதவு பக்கத்தில் பாலிதீன் பைகளால் ஆன பெரிய திரையை உருவாக்கியுள்ளனர். அதன் இடையில் தனது கைகளை உள்ளே நுழைத்து கட்டியணைக்குமாறு பைகளையும் இணைத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அந்த சிறுமி தனது தாத்தா, பாட்டியை வெளியே அழைத்து அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் அந்தப் பைக்குள் கைகளை விட்டு தனது விருப்பப்படி தாத்தா, பாட்டியை கட்டியணைத்து அன்பை பகிர்ந்து கொண்டுள்ளனர். இது குடும்பத்தினர் அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்தது. மேலும் அந்த வயதானவர்களும் பெரும்மகிழ்ச்சி அடைந்தனர், இந்த வீடியோவை அவரது தாய் சமூகவலைதளங்களில் வெளியிட்ட நிலையில் அது பெருமளவில் வைரலாகி வருகிறது.