ஷிவ்ராஜ்குமாரின் மிரட்டல் லுக்.. 45 படத்தின் அலறவைக்கும் டீசர்.!
பட்டாம்பூச்சியால் பறிபோன உயிர்.. 14 வயது சிறுவன் அதிர்ச்சி மரணம்.!

ஆபத்தான செயல்கள்
வினோதமான செயல்களினால் பார்வையாளர்களை ஈர்த்து அதிக லைக்குகளை பெறக்கூடிய எண்ணத்தில் இன்றைய இளம் தலைமுறையினர் ஆபத்தான செயல்கள் பலவற்றில் இறங்கிவிட்டனர். ஒரு பக்கம் கவர்ச்சி மற்றும் சர்ச்சைக்குரிய பதிவுகளினால் கவனத்தை ஈர்த்து வருகின்றனர்.
பிரபல தன்மைக்கான போராட்டம்
ஆனால், மற்றொரு பக்கம் இயல்புக்கே ஒத்து வராத பல்வேறு விஷயங்களை செய்து காட்டி அதன் மூலம் சமூக வலைதளங்களில் பிரபலமாக துடிக்கின்றனர். அந்த வகையில், பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஒரு 14 வயது சிறுவன் தனது வினோத நடவடிக்கையால் உயிர் இழந்த சம்பவம் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கோமாளி, சர்வாதிகாரி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி - டிரம்ப் பரபரப்பு பேச்சு.!
ரிஸ்கி சேலஞ்ச்
ஆன்லைனில் ஆபத்து நிறைந்த சேலஞ்சுகளை செய்து காட்டி வரும் டேவிட் என்ற 14 வயது சிறுவன் சமீபத்தில் சில பட்டாம்பூச்சிகளை பிடித்து அவற்றை கொலை செய்து நசுக்கி விட்டு அதனை தண்ணீரில் கலந்துள்ளார்.
பறிபோன உயிர்
அதன் பின் அந்த தண்ணீரை வடிகட்டி ஊசி மூலமாக அதை தன்னுடைய உடலில் செலுத்தி இருக்கிறார். இதில், டேவிட் உடல் நிலை மிக மோசமாக இருக்கிறது. இதனை தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து இருக்கிறார்.
இதையும் படிங்க: கோவை: பாதாள சாக்கடை பணியில் சோகம்; இளைஞர் மணல் குவியலில் சிக்கி மரணம்.!