20 வயது இளம்பெண்ணின் உடலில் இப்படியா?.. 300 சிறுநீரக கற்களை அகற்றிய மருத்துவர்கள்.!



200-kidney-stone-removed-from-taiwan-girl

 

தைவான் நாட்டைச் சார்ந்த 20 வயது இளம்பெண் சியா யூ. இவர் கடந்த சில நாட்களாகவே காய்ச்சல் மற்றும் அதிகளவு முதுகு வலி காரணமாக அவதிப்பட்டுள்ளார். 

இதனை அடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், இளம்பெண்ணின் சிறுநீரகத்தில் 300 கற்கள் இருப்பதை கண்டு அதிர்ந்தனர். 

இதனை தொடர்ந்து உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு பெண்ணின் சிறுநீரக பையில் இருந்த கற்களை அகற்றியுள்ளனர்.

World news

இதுகுறித்து கருத்து தெரிவித்த மருத்துவர்கள், பெண்ணின் உடலில் இருந்து 2 செ.மீ முதல் 5 செ.மீ அளவிலான சிறுநீரக கற்கள் அகற்றப்பட்டுள்ளது. தைவானை பொறுத்தமட்டில் 9 விழுக்காடு மக்களுக்கு இந்த பாதிப்பு உள்ளது.

வெப்பநிலையில் தாக்கத்தில் இருந்து தப்பிக்க தேவையான நீரை மக்கள் குடிக்க வேண்டும். அதுவே சிறுநீரக கற்கள் உருவாகாமல் தடுக்கும். அவ்வப்போது சிறுநீர் கழித்திட வேண்டும்.