தனது உயிரை காப்பாற்றிய மருத்துவமனைக்காக 5 வயது சிறுவன் செய்த ஆச்சர்ய காரியம்.! குவியும் வாழ்த்துக்கள்!



5-year-boy-raises-refund-money-for-hospital

லண்டனை சேர்ந்தவர் டோனி ஹெட்கெல். தற்போது 5 வயது நிறைந்த அவர், குழந்தையாக இருந்தபோது வீட்டில் ஏற்பட்ட பிரச்சனையின்போது பெற்றோர் உண்டாக்கிய படுகாயத்தால், அவரது இருகால்களையும் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து அவர்  தற்போது செயற்கைக் கால்களின் உதவியுடன் நடந்து வருகிறார். மேலும் தற்போது டோனி தனது வளர்ப்பு பெற்றோர்களுடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் சிறுவயதில் தனது உயிரை காப்பாற்றிய மருத்துவமனைக்கு ஏதாவது உதவி செய்யவேண்டும் என எண்ணிய அவர் வித்தியாசமான முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

அதாவது டோனி சமீபத்தில் இரண்டாம் உலகப்போரில் பங்கு பெற்ற கேப்டன் டாம் மூர் என்பவர் கொரோனாவிற்காக இரவுபகல் பாராமல் பணியாற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு உதவுவதற்காக தனது தோட்டத்திலேயே நடந்து நிதி திரட்டிய சம்பவம் குறித்து கேள்விப்பட்டுள்ளார். 

England

அவரை போலவே தானும் உதவ வேண்டும் என எண்ணிய அவர் தனது செயற்கைக்கால் மற்றும் ஊன்றுகோல் உதவியுடன் 10 கிலோமீட்டர் நடந்து 500 யூரோக்கள் அதாவது 42,800 ரூபாய் நிதிதிரட்டத் திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில் டோனியின் இந்த முயற்சியை பார்த்து ஆச்சரியமடைந்த மக்கள் அவரை உற்சாகபடுத்தும்விதமாக  டோனியின் அறக்கட்டளைக்கு இதுவரை 2.74 கோடி ரூபாய் நன்கொடை அனுப்பியுள்ளனர். இந்த தகவல் வைரலான நிலையில், டோனிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.