குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
உலகின் மிகப்பெரிய வெங்காயம்.. சாதனை படைத்த விவசாயி.. எங்கு தெரியுமா.?
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த விவசாயி 9 கிலோ எடையுள்ள மிகப்பெரிய வெங்காயத்தை பயிரிட்டு சாதனை படைத்துள்ளார்.
இங்கிலாந்து நாட்டில் ஹரோகேட் பகுதியில் நடைபெற்ற மலர் கண்காட்சியில் காய்கறி போட்டி நடத்தப்படுகிறது. இந்த கண்காட்சி போட்டியில் மிகப்பெரிய காய்கறிகள் மற்றும் மலர்கள் இடம் பெற்றுள்ளது.
அந்த வகையில் இங்கிலாந்து நாட்டின் நார்த் யார்க்ஷயரில் உள்ள விவசாயி கரேத் க்ரிஃபின் என்பவர் 9 கிலோ எடையுள்ள மிகப்பெரிய வெங்காயத்தை பயிரிட்டு உலக சாதனை படைத்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த வெங்காயத்தை கின்னஸ் உலக சாதனைக்கும் அனுப்பப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.