மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ரம்ஜான் நன்கொடைகள் வாங்க குவிந்த மக்கள் கூட்டம்.. கூட்ட நெரிசலில் சிக்கி 85 பேர் பலி..300க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஏமன் நாட்டில் நன்கொடைகள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டன. அப்போது மக்கள் முண்டியடித்துக் கொண்டு பொருட்களை வாங்க முயன்றபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் பெண்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஏமனில் உள்நாட்டு போரின் காரணமாக கடும் பொருளாதார நெருக்கடியை
மக்கள் சந்தித்து வருகின்றனர்.இதனால் அங்கு வாழும் மக்களை வறுமை வாட்டி வதைக்கிறது. இதன் காரணமாக அங்குள்ள மக்களுக்கு சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அவ்வப்போது உதவிக்கரங்களை நீட்டி வருகின்றனர். அந்த வகையில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு ஏமன் தலைநகர் சனாவில் உள்ள பள்ளி வளாகம் ஒன்றில் மக்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இதற்கான ஏற்பாடுகள் முறையாக செய்யப்படாமல் இருந்துள்ளன. இதனையறியாத மக்கள் பொருட்களை வாங்க முண்டியடித்துக் கொண்டு உள்ளே நுழைந்ததால் குழந்தைகள் பெண்கள் உட்பட 85 பேர் கூட்டு நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். மேலும் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சுபடுகிறது. இதனையடுத்து இந்த நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.