மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆர்கானிக் கீரையில் இருந்து தாவி வந்த தவளை; சமைக்க தயாரான இல்ல்லத்தரசியை பதறவைத்த சம்பவம்.! மன்னிப்பு கேட்ட நிறுவனம்.!
கீரையை சமைக்கப்போன பெண்ணுக்கு தவளை அதிர்ச்சி கொடுத்த நிலையில், சம்பந்தப்பட்ட நிறுவனம் மன்னிப்பு கேட்டு தவறுகள் நடக்காமல் பார்த்துக்கொள்வதாக உறுதி அளித்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள மிச்சிகனை (Michigan) சேர்ந்த பெண்மணி அம்பர் வோரிக். இவர் சம்பவத்தன்று தனது குழந்தைகளுக்கு சமைத்து கொடுக்க, அருகில் இருந்த சூப்பர் மார்க்கெட்டில் இருந்து கீரைகளை வாங்கி வந்துள்ளார்.
இந்த கீரைகளை சமைத்து கொடுப்பதற்காக பிரித்த போது, கீரைக்குள் இருந்து உயிருடன் தவளை ஒன்று வெளியே பாய்ந்துள்ளது. இதனால் பதறிப்போன பெண்மணி பின் தவளையை கண்டதும் அமைதியாகினார். ஆனால், அவரின் குழந்தைகளோ பயத்தில் அலறிப்போயினர்.
விரைந்து தான் கீரை வாங்கிய சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்ற பெண்மணி, இதுகுறித்து புகார் அளித்துவிட்டு கீரைக்கான பணத்தை வாங்கி வந்துள்ளார். இந்த விஷயம் கீரைகளை உற்பத்தி செய்து வழங்கும் Earthbound Farms நிறுவனத்திற்கு தெரியவந்துள்ளளது.
இதனையடுத்து, தனது தவறுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ள அந்நிறுவனம், இனிவரும் காலங்களில் இவைபோன்ற இடர்பாடுகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளது.
தவளை விளைநிலத்தில் இருந்து வந்திருக்கலாம். எமது நிறுவனம் சார்பில் கீரைகள் நன்கு சுத்தப்படுத்தப்பட்டு பின்னரே அனுப்பி வைக்கப்படுகிறது. மேற்கூறிய நிகழ்வுக்கு மன்னிப்பு கேட்கிறோம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
தான் செய்த தவறை ஒப்புக்கொண்டு, இனி எதிர்காலத்தில் அதுபோன்றவை நிகழாமல் இருக்க நடவடிக்கை எடுப்பதாக அளிக்கப்பட்டுள்ள உறுதி பாராட்டுதலுக்குரியது. நமது நாட்டில் இருக்கும் நிறுவனங்களும் இவ்வாறான செயல்களை மேற்கொண்டால் நலம்.
தவறுகள் மனித இயல்பு எனினும், அதனை ஒப்புக்கொண்டு எதிர்காலத்தில் அவை மீண்டும் நடக்காமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுப்பதே என்றும் சிறந்த தீர்வாக அமையும்.