தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
சீன விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு; வைரஸை கண்டறிந்து மெசேஜ் அனுப்பும் மாஸ்க் கண்டுபிடிப்பு..!
வைரசை கண்டறிந்து குறுஞ்செய்தி அனுப்பும் முக கவசத்தை கண்டுபிடித்து சீன விஞ்ஞானிகள் அசத்தி உள்ளனர்.
பீஜிங், சீனாவில் 2019-ஆம் வருடத்தின் இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் இரண்டு வருடங்கள் கடந்தும் முழுமையாக ஒழியாமல் உலகை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலில் மக்களை பாதுகாக்கும் உயிர் காக்கும் கவசமாக முக கவசம் உள்ளது. இந்நிலையில் காற்றில் வைரஸ் கலந்திருந்தால் அதை மெஸேஜ் மூலம் அணிந்திருப்பவருக்குக் காட்டிக் கொடுக்கும் வகையில் நவீன மாஸ்கை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
சீனாவின் ஷாங்காய் நகரில் இருக்கும் டோங்ஜி பல்கலைக்கழகத்தில் செய்யப்பட்ட ஆய்வில் இந்த புதிய முக கவசம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நவீன முககவசத்தை ஒருவர் அணிந்து வெளியில் செல்லும் போது, அவரைச் சுற்றி இருக்கும் காற்றில் சாதாரண வைரஸ் முதல் கொரோனா வைரஸ் வரை எந்த வகையான வைரஸ் கலந்திருந்தாலும், அதனை கண்டறிந்து, அணிந்திருப்பவரின் மோபைலுக்கு மேஸேஜ் அனுப்பி, மாஸ்க் அணிந்திருப்பவரை எச்சரிக்கும் விதமாக இந்ந மாஸ்க் வடிவமைக்கப் பட்டுள்ளது.
இது குறித்து, முக கவசத்தை கண்டுபிடித்த விஞ்ஞானிகளில் ஒருவரான யின் பாங் கூறும் போது, முக கவசம் அணிவது நோய் பரவும் அபாயத்தை குறைக்கும் என்று முந்தைய ஆராய்ச்சி காட்டுகிறது. எனவே, காற்றில் வைரஸ் இருப்பதைக் கண்டறிந்து, அணிபவரை எச்சரிக்கை செய்யும் முக கவசத்தை உருவாக்க நினைத்தோம். எங்கள் முக கவசமானது காற்றோட்டம் குறைவாக இருக்கும் இடங்களில், அதாவது லிப்ட் அல்லது மூடிய அறைகள் போன்றவற்றில் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் அதிகம் இருக்கும் இடங்களில் நன்றாக வேலை செய்யும் என கூறினார்.