#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பெண்ணை கொன்று இதயத்தை சமைத்து சாப்பிட்ட சைக்கோ.. அடுத்தடுத்து 4 அதிரவைக்கும் கொலைகள்.. பகீர் சம்பவம்.!
போதைப்பொருள் வழக்கில் கைதான குற்றவாளி, விடுதலைக்கு பின்னர் 4 கொலைகள் செய்த பயங்கரம் நெஞ்சை பதறவைத்துள்ளது.
அமெரிக்காவில் வசித்து வரும் லாரன்ஸ் பால் ஆண்டர்சன் (வயது 44) என்பவர், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் போதைப்பொருள் வழக்கில் கைதாகி 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ளார்.
அவர் 3 ஆண்டுகள் சிறையில் இருந்த பின்னர் விடுதலை செய்யப்பட்ட நிலையில், விடுதலை செய்யப்பட்ட சில நாட்களிலேயே ஒக்லஹோமா மாகாணத்தில் பெண்ணின் இதயத்தை வெட்டி எடுத்துள்ளார்.
இவர் ஆண்ட்ரியா பிளான்கான்ஷிப் என்ற பெண்ணுடைய இதயத்தை வெட்டி, தனது அத்தை மற்றும் மாமாவுடைய வீட்டிற்கு எடுத்து சென்று உருளைக்கிழங்கோடு சமைத்து பரிமாறி அவரும் உண்டுள்ளார்.
பின்னர், அவரின் அத்தை, மாமா மற்றும் 4 வயது குழந்தைகளையும் ஈவு இரக்கமின்றி கொலை செய்துவிட்டு சடலத்துடன் இருந்துள்ளார், அக்கம் பக்கத்தினர் அலறல் சத்தம் கேட்டு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் சுதாரித்து ஆண்டர்சன்னை கைது செய்தனர். அவருக்கு நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.