#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நான் செய்த தவறுக்கு வருந்துகிறேன் - நடிகர் வில் ஸ்மித் பகிரங்க மன்னிப்பு கேட்டார்.!
மனைவியை உருவ கேலி செய்ததால் தொகுப்பாளரின் கன்னத்தில் பளாரென அறைந்த நடிகர் வில் ஸ்மித் தனது செயல்பாட்டுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.
ஆஸ்கர் விருது மேடையில் தொகுப்பாளராக பணியாற்றிய ஹாலிவுட் நடிகர் Chris Rock பிரபல ஹாலிவுட் நடிகரான வில் ஸ்மித்தின் மனைவியை உருவகேலி செய்தார். இதனால் ஆத்திரமடைந்த நடிகர் Will Smith முதலில் சிரித்துக்கொண்டு இருந்தாலும், தொகுப்பாளரின் கேலி ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து, மேடைக்கு சென்ற நடிகர் Will Smith, தொகுப்பாளர் கன்னத்தில் பளார் விட்டு மீண்டும் வந்தார். இவரின் செயல் உலகம் முழுவதும் பாராட்டப்பட்டு வந்தது. மேலும், தனிநபரின் உருவத்தை வைத்து கேலி செய்யும் நகைச்சுவைக்கு கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், மேடை நாகரீகம் கருதி Will Smith செயல்படவில்லை என்று கூறி Academy of Motion Picture Arts and Sciences கண்டனம் தெரிவித்தது. இதனைத்தொடர்ந்து, நடிகர் வில் ஸ்மித் நான் ஒருவரை ஆத்திரத்தில் அடித்தது தவறு என்று மன்னிப்பு கேட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில், "கோபம் என்பது மிகவும் கொடுமையான ஒன்று. நான் அப்படி நடந்திருக்க கூடாது. எனது மனைவியை கேலி செய்ததால், நான் ஒருகணம் ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்றுவிட்டேன். ஆத்திரத்தில் தனிநபரை காயப்படுத்திவிட்டேன். அதற்கு நான் மனதார மன்னிப்பு கேட்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.