"உங்களையும், குடும்பத்தையும் பாருங்க, சண்டை போடாதீங்க" - தல அஜித் ரசிகர்களுக்கு அறிவுரை.!
#JustIN: அமெரிக்காவில் அதிபயங்கர நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளியாக பதிவு.!
அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா மாகாணத்தில் அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அலாஸ்கா மாகாணத்தின் கிழக்கு வடகிழக்கு பகுதியில் 681 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஆண்ட்ரியானோப் தீவு பகுதிகளில், உள்ளூர் நேரப்படி 10:47 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளிகளாக பதிவாகியுள்ளது என அமெரிக்காவின் தேசிய நிலநடுக்க ஆய்வியல் மையம் தகவல் தெரிவித்துள்ளது. அங்கு சுனாமி எச்சரிக்கை ஏதும் தற்போது வரை விடுக்கப்படவில்லை. பாதிப்பு ஏற்பட்டுள்ள இடங்களுக்கு மீட்பு படையினர் விரைந்துள்ளனர்.