கட்சி துவங்கியது முதல், எங்கே சென்றாலும் அதை செய்யும் விஜய்.! ஆச்சரியத்தில் தொண்டர்கள்.!
லேடி கொய்தா பெண் பயங்கரவாதியை விடுவிக்க, மக்களை பணயக்கைதியாக பிடித்த பயங்கரவாதியின் சகோதரன்.! அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்.!!
அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் மாகாணம், கோவில்லே நகரில் யூதர்களின் பெத் இஸ்ரேல் சபை வழிபாட்டுத்தலம் உள்ளது. நேற்று யூதர்கள் வழிபாட்டில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த நிலையில், ஆயுதத்துடன் வந்த மர்ம நபர் வழிபாட்டில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த மக்களை தாக்கியுள்ளார்.
இதனால் மக்கள் பதறியபடி அங்கிருந்து வெளியேறிய நிலையில், 4 பேரை அவர் பணயக்கைதியாக பிடித்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், சம்பவ இடத்தை தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர்.
இதற்கிடையில், மர்ம நபர் முகநூலில் வெளியிட்ட ஆடியோவில், "எனது தங்கையுடன் போனில் தொடர்புகொள்ள வேண்டும். நான் இறந்துவிடுவேன். அமெரிக்காவுடன் பிரச்சனை உள்ளது" என்று பேசி இருந்தார். அவரின் சகோதரி யார்? என ஆய்வு செய்கையில், அவர் பெண் பாகிஸ்தான் பயங்கரவாதியான அப்பியா சித்திக் என ஊடகத்தில் தகவல் வெளியானது.
ஆபியா சித்திக்கை அமெரிக்கா லேடி கொய்தா என்று அழைத்து வரும் நிலையில், நரம்பியல் விஞ்ஞானியாக ஆபியா சித்திக் பணியாற்றி வருகையில், ஆப்கானிஸ்தானில் பணியாற்றி வந்த அமெரிக்க அதிகாரிகளை கொலை செய்ய முயற்சித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு, 86 வருட சிறை தண்டனை பெற்றார்.
நியூயார்க் நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர், டெக்சாஸில் உள்ள போர்டுவோர்த் பெடரல் மெடிக்கல் சென்டர் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை விடுதலை செய்ய ஏற்கனவே மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்து வந்த நிலையில், 4 பேர் பணயக்கைதியாக பிடித்து வைக்கப்பட்டது உறுதியாகியுள்ளது. 8 மணிநேரத்திற்கு பின்னர் ஒரு பணய கைதி விடுவிக்கப்பட்ட நிலையில், அதனைத்தொடர்ந்து பிற 3 பணய கைதிகளும் விடுவிக்கப்பட்டனர்.