#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
என்னம்மா இப்படி பண்ணிட்டீங்களே! டென்ஷனான குழந்தையின் கியூட் ரியாக்ஷனை பார்த்தீங்களா!! வீடியோ இதோ!!
உணவு சாப்பிடுவதற்காக காத்திருந்த குழந்தை தாய் செய்த காரியத்தால் அவரை பயங்கரமாக முறைத்து கடுப்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பொதுவாகவே குழந்தைகள் என்றாலே அழகுதான். அவை செய்யும் சிறு சேட்டைகள் கூட அனைவரையும் மெய் மறந்து ரசிக்க வைக்கும். மேலும் தற்காலத்தில் குழந்தைகளின் க்யூட்டான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அவ்வாறு தற்போது ஒரு வீடியோ வைரலாகி அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது.
அந்த வீடியோவில் குழந்தை ஒன்றிற்கு அதன் தாய் சாப்பாடு ஊட்டிக் கொண்டிருக்கிறார். அப்பொழுது குழந்தை சாப்பாட்டிற்காக காத்திருந்தபோது அதன் தாய் தவறுதலாக தெரியாமல் சாப்பாட்டைக் கீழே போட்டு விடுகிறார்.
இந்நிலையில் கோபமடைந்த குழந்தை முகத்தை சுருக்கி அவரது தாயை பயங்கரமாக முறைத்துள்ளது. அந்த கியூட்டான வீடியோ இணையத்தில் பெருமளவில் பரவி வைரலாகி வருகிறது. மேலும் பலரும் அதனை ரசித்து லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.