மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தனிமை பீல் ஆகுதா??... இப்பவே கட்டிப்பிடி வைத்தியம் செய்யுங்க... ஒருமணிநேரம்., முழு ஆறுதல்..!
கட்டிப்பிடிக்கும் தெரப்பியை வணிகமாக செய்து வரும் ஒருவர், ஒரு மணி நேரத்திற்கு கட்டிப்பிடிப்பதற்கு 75 யூரோக்களை கட்டணமாக வசூலிக்கிறார்.
கனடா நாட்டில் உள்ள மாண்ட்ரியால் பகுதியைச் சார்ந்தவர் ட்ரெசர் (வயது 30). இவர் 'ட்ரெவர் ஹூடன்' என்ற கட்டிப்பிடிக்கும் தெரப்பியை வணிகமாக செய்து வருகிறதாக கூறப்படுகிறது. இவர் ஒரு மணி நேரத்திற்கு கட்டிப்பிடிப்பதற்கு 75 யூரோக்களை கட்டணமாக வசூலிப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் மற்றவர்களுடன் பேசி பழக சிரமப்படும் நபர்களுக்கு "கனெக்சன் கோச்சிங்" என்ற சேவையையும் செய்து வருகிறார். 10 வருடத்திற்கு முன்னதாக மனிதர்களுக்கு இடையேயான பிணைப்பு குறித்த பின்புலத்தை அறிந்து கொண்ட அவர், தற்போது அதனை சேவையாக செய்து வருகிறார்.
இந்த விஷயம் தொடர்பாக அவர் கூறுகையில், "இது வணிகம் கிடையாது. பலருக்கும் புரிதல் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இதனை நான் செய்து வருகிறேன். இது பாலியல் சார்ந்த தொழில் கிடையாது. முழுக்க முழுக்க பாசப்பந்த அரவணைப்பு மட்டுமே.
ஒரு மணி நேரம் அவர்களை அரவணைப்பதன் மூலம் அமைதியான சூழ்நிலையை நான் ஏற்படுத்திக் கொள்கிறேன். உளவியல் ரீதியாக அனைவருக்கும் புரிதல் வேண்டும். என்னை தேடி வருபவர்களுக்கு என்னால் முயன்ற உதவி செய்கிறேன்" என்று தெரிவித்தார்.