மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: கனமழை எதிரொலி; நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி; 5 பேர் மாயம்..!
தொடர்ந்து பெய்துவந்த கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பரிதாபமாக பலியாகினர்.
சீனாவில் உள்ள சிச்சுவான் மாகாணத்தில், லேஷன் கிராமம் உள்ளது. இது மலைமீது அமைந்துள்ள பண்ணை கிராமம் ஆகும். இன்று அங்கு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டதாக தெரியவருகிறது.
உள்ளூர் நேரப்படி காலை 6 மணியளவில் திடீர் நிலச்சரிவு ஏற்படவே, தகவல் அறிந்து சென்ற மீட்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது வரை 14 பேரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் அம்மாகாணத்தில் அதிக மழை பெய்த நிலையில், மழையின் எதிரொலியாக நிலச்சரிவு ஏற்பட்டு இருக்கிறது என ஏ.என்.ஐ நிறுவனம் தெரிவித்துள்ளது.