திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சூடான்: "குருவிகளைப் போல் சுட்டுக் கொல்லப்பட்ட மனித உயிர்கள்."! எல்லை பிரச்சினையில் 54 பேர் பலி.! ஐநா சபை கண்டனம்.!
வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானின் எல்லைப் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 54 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்தக் கொடூர தாக்குதலில் 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலுக்கு உலக நாடுகளும் தங்களது கண்டனங்களை பதிவு செய்திருக்கிறது.
சூடான் நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டு போரை தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு தெற்கு சூடான் சுதந்திரம் பெற்று தனிநாடாக உதயமானது. அந்நாட்டின் எண்ணெய் வளமிக்க அபேய் பகுதி தெற்கு சூடானின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. எண்ணெய் வளம் இந்தப் பகுதியில் அதிகமாக இருப்பதால் சூடான் மற்றும் தெற்கு சூடான் நாடுகள் அபேய் பகுதியை உரிமை கொண்டாட போரிட்டு வருகிறது. கடந்த மார்ச் மாதம் தெற்கு சூடான் அரசு அபேய் பகுதிக்கு ராணுவத்தை அனுப்பியதிலிருந்து தாக்குதல்கள் தீவிரமடைந்து இருக்கிறது.
இந்தப் பகுதியில் சண்டை நடப்பதை கட்டுப்படுத்த ஐநா படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஜனவரி 28ஆம் தேதி இரவு அபேய் பகுதியில் உள்ள கிராமத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பெண்கள், குழந்தைகள் மற்றும் ஐநா பாதுகாப்பு படை வீரர்கள் உட்பட 54 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 60-க்கும் அதிகமானோர் இந்த கொடூர தாக்குதலில் காயமடைந்திருக்கின்றனர். இந்த சம்பவத்தால் எல்லை பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. இந்த தாக்குதலுக்கு ஐநா சபை தனது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறது.