அமீரக வரலாற்றில் முதல் முறை; துபாய் வளர்ச்சிக்காக 302 பில்லியன் திர்ஹம் நிதி ஒதுக்கீடு.!



Dubai Gets Approval Largest Budget on History 

21% உபரி வருவாயுடன் அமீரகம் துபாயின் மிகப்பெரிய முதல் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் வழங்கி இருக்கிறது. அதேவேளையில், வரும் 2025 - 2027ம் ஆண்டுக்கான வருவாய் செலவினத்தை விட 30 பில்லியன் திர்ஹம்கள் அதிகம் இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. 

அமீரகத்தில் முக்கிய வருவாயை ஏற்படுத்தும் துபாயில், அமீரகத்தின் வரலாற்றில் மிகப்பெரிய அளவில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என அமீரகத்தின் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மஃதூம் தெரிவித்துள்ளார். 

உட்கட்டமைப்பு மேம்படுத்தலுக்கு ஒதுக்கீடு

2025 முதல் 2027 வரையில் துபாய் 302 பில்லியன் திர்ஹம் வருமானத்தை எட்டும். 272 பில்லியன் செலவினத்தை ஒதுக்கும். இது முதல் முறையாக 21% உபரியை எட்டுகிறது. இதன் வாயிலாக அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்களும் பயன்பெறவுள்ளது. 

இதையும் படிங்க: 40 இராணுவ வீரர்கள் கொடூர கொலை; பயங்கரவாதிகளின் உயிர் நடுங்கவைக்கும் செயல்..! மத்திய ஆப்பிரிக்காவில் துயரம்.!

எதிர்வரும் பட்ஜெட்டில் 46% சாலை, பாலம், எரிசக்தி, வடிகால் அமைப்புகளுக்கும், உட்கட்டமைப்பு திட்டங்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. புதிய விமான நிலையமும் துபாயில் அமைக்கப்படவுள்ளது. பிற 30% சுகாதாரம், கல்வி, சமூக மேம்பாடு, வீட்டுவசதி, பிற சேவைகளுக்காக ஒதுக்கப்டுகிறது. 

2024 ல் 79 மில்லியன்திர்ஹம் செலவின்களுக்கு அமீரகம் உத்தரவிட்ட நிலையில், நடப்பு ஆண்டில் அவை 90 பில்லியனாக உயர்த்தப்பட்டது. 
 

இதையும் படிங்க: ரீல்ஸ் வீடியோ மோகத்தால் சோகம்; சிறுவன் மீது மோதிய இரயில்.. பதறவைக்கும் வீடியோ.!