மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
35 வருஷத்திற்கு பிறகு பிறந்த பெண்குழந்தை! ஊரே வாய்பிளக்கும்படி தந்தை கொடுத்த வேற லெவல் வரவேற்பு!!
ராஜஸ்தான் மாநிலம் நாகவுர் மாவட்டத்தில் நிம்தி சந்தவாதா எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹனுமன் பிரஜாபத். இவரது மனைவி சுக்கி தேவி. இவர்களுக்கு திருமணமாகி 35 ஆண்டுகள் குழந்தை இல்லாதநிலையில் முதல் முறையாக கடந்த மார்ச் 3ம் தேதி அழகிய பெண்குழந்தை பிறந்துள்ளது.
நீண்ட காலம் கழித்து குழந்தை பிறந்ததால் ஹனுமன் பிரஜாபத் மிகுந்த சந்தோசத்தில் இருந்துள்ளார். குழந்தைக்கு ரியா என பெயரிட்டுள்ளனர். இந்த நிலையில் குழந்தை பிறந்தபிறகு தாய் வீட்டில் இருந்த மனைவியையும், குழந்தையையும் தனது வீட்டிற்கு அழைத்து வர ஹனுமன் பிரஜாபத் செய்த காரியம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது.
அதாவது சுமார் 4.5 லட்சத்திற்கு ஹெலிகாப்டர் ஒன்றை வாடகைக்கு எடுத்த ஹனுமன் பிரஜாபத், தனது உறவினர்களுடன் சுக்கி தேவியின் வீட்டிற்கு சென்று குழந்தையையும் அவரையும் அழைத்து வந்துள்ளார். இந்நிலையில் இதுகுறித்து அவர் கூறுகையில், எனது மகள் எங்கள் வீட்டு இளவரசியின் வருகையை நாங்கள் மிகவும் சிறப்பானதாக விரும்பினோம். அதனால் இத்தகைய ஏற்பாட்டை செய்தோம். ஹெலிகாப்டரில் எனது குழந்தையை அழைத்து வரும் யோசனையை என் தந்தை தான் முதலில் கூறினார் என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.