மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மனைவியை சீரழித்த 51 பேர்; வீடியோ எடுத்த கணவனின் நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி செயல்.!
பிரான்ஸ் நாட்டில் உள்ள மாசன் நகரில் வசித்து வரும் நபர், தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் இன்பமாக வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 50 ஆண்டுகளாக மனைவியுடன் குடித்தனம் நடத்தி வந்த நிலையில், சமீபத்தில் அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.
அதாவது, தினமும் தனது மனைவிக்கு உணவில் போதைமருந்தை கலந்து கொடுக்கும் கணவன், தனது மனைவியை பலர் பாலியல் பலாத்காரம் செய்ய அனுமதி வழங்கியுள்ளார். இதனை விடியோவாக எடுத்தும் அதனை "Abuse" என்ற பெயரில் பதிவு செய்தும் வைத்துள்ளார்.
கடந்த 2011ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை மனைவிக்கு உணவில் போதைப்பொருள் கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ய வைத்துள்ளார். அந்த பெண்மணியை ஐ.டி பணியாளர், லாரி ஓட்டுநர், சிறை காவலாளி என பலரும் பலமுறை பலாத்காரம் செய்து இருக்கின்றனர்.
சமீபத்தில் தனது கணவரின் செயல்பாடுகளை அறிந்துகொண்ட மனைவி, இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல் துறையினரின் விசாரணையில் அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. இந்த விவகாரத்தில் 92 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 51 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.