#Breaking: புத்தாண்டை வரவேற்றது நியூசிலாந்து.. கண்ணைக்கவரும் வானவேடிக்கைகள்.! கொண்டாட்ட காணொளி உள்ளே.!



Happy new year 2024 newziland

 

2023-ம் ஆண்டை நிறைவு செய்து உலகமே 2024-ம் ஆண்டு வரவேற்க முழுவீச்சில் தயாராகி வருகிறது. இன்று உலகெங்கும் உள்ள பல நாடுகளின் முக்கிய நகரங்களில் கொண்டாட்டங்கள் கலைகட்டும். 

இதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. உலகம் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு பூமியையும் சுற்றி வருவதால் ஒவ்வொரு நாட்டிலும் நேரம் என்பது வேறுபடும். 

அந்த வகையில் புத்தாண்டை பசுபிக் தீவு நாடுகளான டாங்கோ, சமோவா, கிரி பாட்டி(Kiribati), நியூசிலாந்து ஆகிய நாடுகள் முதலில் வரவேற்கும். இந்திய நேரப்படி மதியம் 03:30 மணிக்கு இவர்களுக்கு நள்ளிரவு 12:00 மணி ஆகும். 

அதனால் சரியாக இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3:30 மணிக்கு புத்தாண்டை வரவேற்றார்கள். இந்நிலையில் நியூசிலாந்து நாட்டிலும் புத்தாண்டு வரவேற்கப்பட்டுள்ளது. 

அதனை முன்னிட்டு நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்து நகரின் ஸ்கை டவரில் கண்கவர் வானவேடிக்கை ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததை மக்கள் கண்டுகளித்தனர். அது குறித்த வீடியோ உங்களின் பார்வைக்காக.