மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
லெபனானின் பயங்கர வெடி விபத்திற்கு காரணம் என்ன? வெளியான அரசின் அலட்சியம்!
லெபனானின் பயங்கர வெடி விபத்திற்கு காரணம் என்ன,எப்படி அவ்வளவு கெமிக்கல் அங்கு வந்தது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பெய்ரூட் நகரில் இருக்கும் கிடங்கு ஒன்றில் அதிக அளவு கெமிக்கலை கட்டுப்படுத்தும் வசதிகள் இல்லாமல் இருந்ததால் தான் இந்த பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு இந்த கிடங்கிற்கு 2750 டன் எடையுள்ள அம்மோனியம் நைட்ரேட் பார்சல் ஒன்று ரஷ்யாவிலிருந்து வந்துள்ளது.
தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான இந்த கெமிக்கலானது கடலில் ஏற்பட்ட அதிக காற்றழுத்த காரணமாகவும், தொழில் நுட்ப கோளாறு காரணமாகவும் கப்பலானது துறைமுகத்திற்கு வந்துள்ளது. ஆனால் மீண்டும் அங்கிருந்து அந்த கப்பல் வெளியே செல்ல லெபனான் துறைமுக அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
கிடங்கில் வைக்கப்பட்டு பின் பணம் பார்க்கலாம் என அதிகாரிகள் நினைத்துள்ளனர். ஆனால் அம்மோனியம் நைட்ரேட் விலை குறைவு என்பதால் அந்த கெமிக்கலை வாங்க யாரும் முன் வரவில்லை. அதனையடுத்து ஓனருக்கே திருப்பி அனுப்பி விடலாம் என நினைத்து அவரை தொடர்பு கொண்ட போது அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.
அதன்பின் கஸ்டம்ஸ் அதிகாரிகள் அந்நாட்டு நீதிபதிகள் குழுவிற்கு இது தொடர்பாக கடிதம் அனுப்பியுள்ளனர். ஆனால் அங்கிருந்து எந்த ஒரு பதிலும் வராமல் இருந்துள்ளது. இதேபோல் கடந்த 6 வருடங்களாக கடிதம் அனுப்பியுள்ளனர். ஒவ்வொருமுறை இதை மக்களிடம் விற்றுவிடுங்கள், ராணுவத்திற்கு விற்றுவிடுங்கள், குண்டுகள் தயாரிக்கும் அதிகாரபூர்வ நிறுவனங்களுக்கு விற்று விடுங்கள் என்று ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளது.
ஆனால் அம்மோனியம் நைட்ரேட்டை வாங்க யாரும் முன் வரவில்லை. அதன்பிறகு கஸ்டம்ஸ் அம்மோனியம் நைட்ரேட் பற்றி அப்படியே மறந்துள்ளது. அம்மோனியம் நைட்ரேட் மொத்தமாக ஒரே இடத்தில் அதிக நாட்கள் அடைக்கப்பட்டிருந்த காரணத்தால் வெப்பமான வெளியாகி இந்த பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.