மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இது உங்களுக்கே ஓவரா தெரியல, இதுதான் உங்க எளிமையா ? இம்ரான்கானின் செயலால் ஆவேசமான நெட்டிசன்கள்.!
பாகிஸ்தானில் பிரதமராக பதவியேற்ற இம்ரான்கான் தனக்கு எந்த வசதியும் தேவை இல்லை. எளிமையான வாழ்க்கையை போதும் என கூறிய நிலையில் வீட்டிலிருந்து பிரதமர் அலுவலகத்திற்கு தினமும் ஹெலிகாப்டரில் சென்று வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் பாகிஸ்தானில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி முன்னணியில் வெற்றி பெற்றார்.
மேலும் அவர் பிரதமராக பதவி ஏற்ற நிலையில் தனக்கு ஏராளமான அறைகள் கொண்ட பிரதமரின் அதிகாரப்பூர்வ வீடு வேண்டாம்,இரண்டு புல்லெட் ப்ரூப் கார்கள் மட்டும் போதும், நான் எளிமையான வாழ்க்கையை பின்பற்ற போகிறேன் என கூறியிருந்தார்.
மேலும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் விமான பயணத்தின் போது கூடுதல் கட்டணத்தில் பயணிக்கக் கூடாது எனவும் பல உத்தரவுகளை பிறப்பித்தார்.அவரது எளிமையை கண்டு பல நாட்டினரும் பாராட்டி வந்தனர்.
இந்நிலையில் அவர் தனது வீட்டிலிருந்து பிரதமர் அலுவலகத்திற்கு தினமும் ஹெலிகாப்டரில் சென்று வருவது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது இம்ரான் கானின் வீட்டிற்கும் பிரதமர் அலுவலகத்திற்கும் இடையே 15 கிலோ மீட்டர் தூரமே உள்ளது .இந்நிலையில் ஆனால் அவர் வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு செல்ல ஹெலிகாப்டரை பயன்படுத்துகிறார்.
மேலும் வைரலாகும் இந்த புகைப்படத்தால் சமூக வலைத்தளங்களில் பலரும் இதுதான் உங்கள் எளிமையா என கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.