8 ஆண்டுகளாக தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கும் இந்தியா!!.. ஆய்வு நிறுவனம் வெளியிட்ட ஆச்சரிய தகவல்..!!



india-continues-to-be-the-first-of-the-list-of-countrie

உலகளவில் ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா தொடர்ந்து முதல் இடத்தில் நீடிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சுவீடன், ஸ்டாக்கோம் பகுதியில் இயங்கிவரும் ஆய்வு நிறுவனம் சிப்ரி. இந்த நிறுவனம் கடந்த 4 ஆண்டுகளில் அதிக அளவில் ஆயுதங்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்த நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

சிப்ரி நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியலில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 2022 ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ஆயுத இறக்குமதி செய்த நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் பெற்றுள்ளது. இரண்டாம் இடத்தை சவுதி அரேபியாவும் அடுத்தடுத்த இடங்களை முறையே கத்தார், ஆஸ்திரேலியா, சீனா போன்ற நாடுகளும் பெற்றுள்ளன.

இதற்கு முந்தைய நான்கு ஆண்டுகளுக்கு இடைப்பட்ட (2013-2017) காலகட்டத்தில் இந்தியாவின் ஆயுத இறக்குமதி 11 சதவீதம் குறைந்திருந்த போதிலும், இந்த பட்டியலில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் நீடிப்பதாக  அந்த நிறுவனம் கூறியுள்ளது.

இதே காலகட்டத்தில் ஆயுதங்களை ஏற்றுமதி செய்ததில் அமெரிக்கா முதலிடத்தை பிடித்துள்ளது. இதற்கு அடுத்த இடத்தில்  ரஷ்யாவும் அடுத்தடுத்த இடங்களை பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனி நாடுகள் பிடித்துள்ளன. சீனா தனது ஆயுதங்களை அதிக அளவில் பாகிஸ்தானுக்கு விற்பனை செய்துவருவது குறிப்பிடத்தக்கது.