மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முகக்கவசம் அணிய மறுத்து, அடம்பிடித்த பயணி.. விமானி என்ன செய்தார் தெரியுமா?..! அதிரடி ஆப்பு.!
அமெரிக்காவில் உள்ள மியாமி நகரில் இருந்து, இங்கிலாந்து நாட்டின் இலண்டன் நகருக்கு அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் நேற்று இலண்டனை நோக்கி பயணம் செய்தது. இந்த விமானத்தில் பயணம் செய்த பயணி, முகக்கவசம் அணிய மறுத்து ரகளை செய்துள்ளார்.
விமான பணியாளர்கள் கொரோனா வைரஸை மேற்கோள்காண்பித்து, கெஞ்சி கூத்தாடியும் எந்த பலனும் இல்லை. இதனையடுத்து, விமானிக்கு தகவல் தெரிவிக்கப்படவே, அவர் விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகளை தொடர்புகொண்டு, விமானத்தை அவசரமாக தரையிறக்க அனுமதி வாங்கியுள்ளார்.
அதிகாரிகள் உடனடியாக விமானம் தரையிறங்க அனுமதி கொடுத்ததும், மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே வந்தது. விமானத்தில் முகக்கவசம் அணிய அடம்பிடித்து ரகளை செய்த நபரை அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்து சென்றனர். மேலும், அவரின் பயண அனுமதியும் இரத்து செய்யப்பட்டன. பின்னர், விமானம் தனது பயணிகளுடன் இலண்டன் புறப்பட்டு சென்றது.
இந்த விஷயம் தொடர்பாக அமெரிக்கன் ஏர்லைன்ஸ், "சம்பந்தப்பட்ட பயணி இனி விமான பயணத்திற்கு தடை செய்யப்பட்டவர்களின் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளார்" என்று தெரிவித்துள்ளது. ஒரேயொரு முகக்கவசம் அணியாத காரணத்தால் விமான செலவு ரூ.2,23,153 இலட்சம், விசா தொகை போன்றவை நஷ்டம்.