மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மைக்ரோசாப்ட் CEO சத்யா நாதெள்ளாவின் 26 வயது மகன் இயற்கை எய்தினார் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெள்ளாவின் மகன் 26 வயதில் மரணம் அடைந்தார்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றுபவர் சத்யா நாதெள்ளா. இவரின் மனைவி அணு. தம்பதிகள் இருவருக்கும் ஜைன் நாதெள்ளா என்ற 26 வயது மகன் இருக்கிறார். ஜைன் நாதெள்ளா பிறந்தபோதே பெருமூளையில் வாத பிரச்சனையுடன் பிறந்துள்ளார்.
இந்த நிலையில், அவரை குணப்படுத்த தந்தை என்ற முறையில் சத்யா நாதெள்ளா பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வந்த நிலையில், அவை அனைத்தும் பொய்த்து போயுள்ளது. 26 வயதில் சத்யா நாதெள்ளாவின் மகன் இன்று உயிரிழந்துள்ளார். இந்த தகவல் மைக்ரோசாப்ட் நிர்வாக ஊழியர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்பின்னரே, ஊடகங்களுக்கு செய்திகள் தெரியவந்துள்ளது. கடந்த 2014 ஆம் வருடம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்ற சத்யா நாதெள்ளா, மாற்றுத்திறனாளிகளுக்கு சிறந்த சேவைகள் செய்ய, அதற்கான நிறுவனத்தின் மீது கவனத்தை செலுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.