சூடானில் நடக்கும் ராணுவ மோதல்.. 56 பேர் பலி... இந்தியர்கள் வெளியே வர வேண்டாம்... இந்திய தூதரகம்...!



Military conflict in Sudan.. 56 killed... Indians should not come out... Indian Embassy...!

சூடானில் ராணுவத்திற்கு இடையே ஏற்பட்ட மோதலில் இந்தியர் ஒருவர் உள்பட 56 பேர் பலியாகி உள்ளனர். 

ஆப்பிரிக்க நாடான சூடானில் ஆர்.எஸ்.எப். துணை ராணுவ படைகளை, ராணுவத்துடன் இணைப்பது குறித்து துணை ராணுவ கமாண்டர் முகமது ஹம்தான் தாக்லோ மற்றும் ராணுவ தளபதி அப்தல் பதா அல்-பர்ஹன் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து அந்த நாட்டின் ராணுவம் மற்றும் துணை ராணுவ படைகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ராணுவத்தினர், ஆர்.எஸ்.எப். துணை ராணுவத்தின் படைத்தளங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதனிடையே ஆர்.எஸ்.எப். அந்த நாட்டின் தலைநகர் கார்டோமில் இருக்கும் விமான நிலையம், அதிபர் மாளிகை ஆகியவற்றை கைப்பற்றி உள்ளதாக அறிவித்துள்ளது. இந் நிலையில் அங்கிருக்கும் இருக்கும் இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. 

இந்த சூழலில் நிதானமாக செயல்பட வேண்டும் என்றும், தேவையின்றி வெளியே வரவேண்டாம் என்றும் வீட்டிற்குள் பாதுகாப்புடன் இருக்குமாறும், அங்குள்ள இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது.

இந்த நிலையில், சூடானில் ராணுவத்தினருக்கு இடையேயான மோதலில் பொதுமக்கள் 27 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 170 பேர் காயமடைந்துள்ளனர். இந்த நிலையில், பலி எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் இந்தியர் ஒருவரும் உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.