சீப் பப்ளிசிட்டிக்காக இப்படியா காமிக்கிறது? நடிகையை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.!
எப்படியாவது திரும்ப வந்துவிடுங்கள் அம்மா..! கொரோனாக்கு பலியான தாய்க்கு தொடர்ந்து குறுந்தகவல் அனுப்பி வரும் மகள்.! மனதை உருகவைக்கும் நிகழ்வு.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இந்திய வம்சாவளியை சேர்ந்த மத்வி அயா - ராஜ் தம்பதியினர் கடந்த 1993 ஆம் ஆண்டு முதல் வாழ்ந்து வந்துள்ளனர். இந்த தம்பதியினருக்கு மின்னொளி என்ற மகள் உள்ளார். மேலும் மத்வி அயா நியூயார்க் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் மத்வி அயா நியூயார்க் நகர மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார். அப்போது துரதிர்ஷ்டவசமாக மத்விக்கும் கொரோனா பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளது. அதனை அடுத்து மார்ச் 18 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மத்வி 11 நாட்களுக்கு பிறகு உயிரிழந்துள்ளார்.
கொரோனா சிகிச்சையில் இருந்த போது மகள் மின்னொளி, அம்மா நீங்க கண்டிப்பாக மீண்டு வருவீர்கள் என்று தொடர்ந்து மத்வியின் செல்போனுக்கு குறுந்தகவல் அனுப்பி வந்துள்ளார். முதலில் மகளின் குறுந்தகவலுக்கு பதிலளித்து வந்த மத்வி அயா. நாளடைவில் உடல் நிலை மோசமாகவே எந்த ஒரு பதிலும் திரும்பி வரவில்லை.
11 நாட்களுக்கு பிறகு தாய் இறந்து விட்டார் என்ற தகவல் மட்டும் வந்துள்ளது. ஆனால் இதனை உணராத மகள் மின்னொளி தாய் இறந்த 2 வாரங்கள் கடந்த பிறகும் கூட தாயின் செல்போனுக்கு தொடர்ந்து எப்படியாவது திரும்ப வந்துவிடுங்கள் அம்மா என்ற குறுந்தகவலை அனுப்பி வருகிறார்.