தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று மருத்துவமனையில் வெடித்து சிதறிய ஆக்சிஜன் சிலிண்டர்.! 82 பேர் பரிதாப பலி.!
ஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாத்தில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து நேற்றிரவு பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் நோயாளிகள் தங்கியுள்ள அறைகளிலும் மளமளவென்று தீ பரவியது. இதனால் அங்கிருந்த நோயாளிகள் மருத்துவமனையில் இருந்து வெளியேற முடியமால் பலியாகி உள்ளனர்.
அங்கு ஏற்பட்ட தீ விபத்தில் 82 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 110 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். இதனையடுத்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
Fire from oxygen tank blast in Baghdad COVID-19 hospital kills 82: Some 110 people were also injured, Interior Ministry spokesman Khalid al-Muhanna said. Most of the dead and injured were patients. https://t.co/3Zu8anQno2 JPost pic.twitter.com/3LaTJ8CliM
— Jewish Community (@JComm_NewsFeeds) April 25, 2021
அங்கு நடந்த விபத்து தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி தக்க தண்டனை வழங்கும்படி ஈராக் பிரதமர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் விபத்து நடந்த மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளை உடனடியாக கைது செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.